தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

காசோலை மோசடி சட்டத்தினை திருத்த அரசு ஆலோசனை! - மத்திய நிதி அமைச்சகம்

சிறு குற்றங்களைத் தீர்ப்பதற்காக எடுக்கப்படும் கால அளவு, நேர விரயம் போன்றவைகளைக் கருத்திற்கொண்டு, காசோலை மோசடி சட்டத்தினைத் திருத்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

Finmin
Finmin

By

Published : Jun 11, 2020, 7:23 PM IST

டெல்லி: சிறு குற்றங்களைத் தீர்ப்பதற்காக எடுக்கப்படும் கால அளவு, நேர விரயம் போன்றவைகள் நிறுவனங்களுக்குத் தொய்வை ஏற்படுத்தும் என்பதனை கருத்திற்கொண்டு காசோலை மோசடி சட்டத்தினை திருத்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

Negotiable Instrument Act (பேச்சுவார்த்தைக்குட்பட்ட உபகரண சட்டம்) என்று ஆங்கிலத்தில் சொல்கிற சட்டத்தில் காசோலையை, தான் தரவேண்டிய ஒரு தொகைக்காக ஒரு நபர் இன்னொரு நபருக்கு; அதாவது யாரிடமிருந்து கடன் பெற்றாரோ அந்த நபருக்கு அந்த காசோலையை கொடுத்துவிட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தப் பணத்தை தரவில்லை என்றால், அந்த காசோலை அவரது வங்கியில் டெபாசிட் செய்யும் பொழுது போதிய பணம் இல்லை என்றோ, வேறு சில காரணங்களுக்காகவோ அந்த காசோலை வங்கியில் கலெக்ஷன் ஆகாமல் திரும்ப வந்துவிட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கக்கூடிய ஒரு குற்றமாக கருதப்படும்.

அதுமட்டுமில்லாமல், அந்த காசோலையில் என்ன தொகை எழுதப்பட்டிருக்கிறதோ, அந்த தொகையில் இரண்டு மடங்குத் தொகை அபராதமாக அல்லது இழப்பீடாக நீதிமன்றம் விதிப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details