டெல்லி: வருங்கால வைப்பு நிதி தொடர்பான அரசின் உதவி மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமைப்பு ரீதியிலான தொழிலாளர்களை பொறுத்தமட்டில், இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய மாத சந்தாவான 12 விழுக்காட்டை, தொழில் நிறுவன தலைவர்கள் செலுத்த வேண்டிய அதே அளவு தொகையையும் அடுத்த 3 மாதங்களுக்கு மத்திய அரசே செலுத்தும் என்று ஏற்கனவே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
'என்னது அம்பானி சொத்து மதிப்பை விட ஐந்து மடங்கு பெரியதா... இந்தத் திட்டம்'
இந்தச் சலுகை அதிகபட்சமாக 100 ஊழியர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும். அதிலும் ஒரு நிபந்தனை உண்டு. அப்படி பணியாற்றும் ஊழியர்களில் 90 விழுக்காடு ஊழியர்களின் மாத ஊதியம் ரூ .15,000க்கும் குறைவாக இருப்பது அவசியம்.
மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான இ.பி.எப் தொகை இதனால் மிச்சமானது. இப்போது, அது மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்ளுக்கான தொழிலாளர்களின் பி.எப். பங்களிப்பையும் அரசு வழங்கும் என்று நிர்மலா தெரிவித்திருந்தார். இதனால் ரூ.6750 கோடி அரசுக்கு கூடுதலாக செலவும், 4.3 கோடி ஊழியர்கள் பயனடைவார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்களுக்கு வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) பங்களிப்பு தற்போதைய 12 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாகக் குறைக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். இந்த நடவடிக்கையால் ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியத் தொகை அதிகரிக்கும். ஆனால், அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.
நிதியமைச்சரின் அறிவிப்புகள் எல்லாம் சரிதான்... அதற்கு எங்கிருந்து பணம் வரும்?
வருங்கால வைப்பு நிதியில் சந்தா செலுத்தும் ஊழியர்களின் அவசர செலவுகளுக்காக தாங்கள் செலுத்திய தொகையில் ‘75 விழுக்காடு தொகை அல்லது மூன்று மாத ஊதியம்’ இதில் எது குறைவோ அதை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். அதை திரும்ப செலுத்த தேவையில்லை என்று ஏற்கனவே நிர்மலா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.