இந்தியாவின் முன்னணி பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை ஏலமெடுக்கும் காலக்கெடுவை மத்திய அரசு தற்போது நீட்டித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை லாபகரமாக இயக்க, தனியார் வசம் ஒப்படைக்கும் முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிறுவனங்கள், ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் கேட்க முன்வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு, வரும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.