தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கூகுள் தாய் நிறுவனத்தில் தமிழர் சுந்தர் பிச்சைக்குத் தலைமை பொறுப்பு!

நியுயார்க்: கூகுளின் தாய் நிறுவனமாகக் கருதப்படும் அல்பஃபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

Google's CEO sundar pichai now will take extra responsibility for its parent company
Google's CEO sundar pichai now will take extra responsibility for its parent company

By

Published : Dec 4, 2019, 4:26 PM IST

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகிப்பவர் சுந்தர் பிச்சை. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சுந்தர் பிச்சைக்குத் தற்போது புதிய பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதாவது கூகுளின் தாய் நிறுவனமான அல்பஃபெட்டில் (Alphabet) அவருக்குக் கூடுதலாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் சுந்தர் பிச்சை, கூகுள் தலைமை செயல் அதிகாரி பொறுப்புடன், அல்பஃபெட் நிறுவனத்தின் தலைமைச் செயலர் பொறுப்பையும் கூடுதலாக வகிக்க உள்ளார். சுந்தர் பிச்சை கடினமான சூழலில் அல்பஃபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.

ஏனெனில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விசாரணையை மேற்கொண்டு வருகிறார். கூகுள் தற்போது ட்ரம்பின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. இதற்கிடையில் வருடாந்திர டெவலப்பர் மாநாடு மற்றும் காலாண்டு முதலீட்டாளர்கள் மாநாடு ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி ''கூகுளின் முகமாக'' சுந்தர் பிச்சை மாறிவிட்டார்.
கூகுள் இந்த மாதத்தில் நான்கு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருந்தது. இதனிடையே கூகுளின் தாய் நிறுவனத்துக்கு சுந்தர் பிச்சை தலைமை செயல் அதிகாரியாக கூடுதலாகப் பொறுப்பு ஏற்றுள்ளார். கூகுள் பிச்சை தமிழ்நாட்டின் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இதைச் செய்தால் பெருமையெல்லாம் உனக்குதான் சுந்தர் பிச்சை' - சீனு ராமசாமி ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details