ஒரு செல்போனில் இருந்து மற்றொரு செல்போனுக்கு புகைப்படங்களைகூகுள் போட்டோஸ் (Google Photos) மூலமாக அனுப்ப வேண்டும் என்றால் தனித்தனியாக புகைக்கப்படங்களை கிளிக் செய்து, அதன்பின் தான் அனுப்ப முடியும். இது மிகவும் கடினமாக இருப்பதாக பயனர்கள் தொடர்ச்சியாக கூகுளிடம் கோரிக்கை வைத்திருந்தனர். கோரிக்கையை ஏற்று கூகுள் நிறுவனம் பயனர்கள் புகைப்படங்களை முழு ஆல்பமாகவே அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து கூகுள் போட்டோஸ் ஷேரிங் பொறியாளர் சஞ்சுக்த மாத்தூர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த டிசம்பர் மாதம், பயனர்கள் தங்களது நணபர்களுக்குப் பிரத்யேகமாக குறிப்பிட்ட போட்டோஸ், வீடியோஸ் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தினோம்.