தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கூகுள் பே புதிய வெர்ஷனில் தனிப்பட்ட பணப்பரிவர்த்தனைகளை அழிக்கும் வசதி அறிமுகம் - டிஜிட்டல் பரிவர்த்தனை செயலி

பயனாளர்கள், தங்களின் தனிப்பட்ட பணப்பரிவர்த்தனைகளை அழித்துக்கொள்ளும் வசதி, கூகுள் பே செயலியின் புதிய வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

google pay
கூகுள் பே

By

Published : Mar 12, 2021, 4:42 PM IST

டெல்லி:டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலியான கூகுள் பே, அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த வரிசையில், விரைவில் வரவுள்ள கூகுள் பே செயலியின் புதிய வெர்ஷனில், 'பர்சனலைசேஷன் வித்இன் கூகுள் பே' வசதி கொடுக்கப்படவுள்ளது. அதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் தனிப்பட்ட பணப்பரிவர்த்தனைகளின் தகவல்களை அழித்துக்கொள்ள முடியும்.

மேலும், அனைத்துப் பயனர்களும் அடுத்த வெர்ஷனுக்கு அப்டேட் செய்தவுடன், தகவல்களை அழிக்கும் வசதியை ஆன் அல்லது ஆப் செய்திடக்கோரி கேட்கப்படும்.

பயனர்களின் தனிப்பட்ட தகவல்களையும், பணப்பரிவர்த்தனை தகவல்களையும் வேறுநிறுவனத்திற்கோ, அல்லது விளம்பர நோக்கத்திற்கோ பகிரப்படாது என கூகுள் பே நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கார்டு ஸ்வைப்பிங் மெஷினாக மாறும் ஸ்மார்ட்போன்கள்: பேடிஎம் அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details