ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள், தங்களது நேரத்தை ஆன்லைன் செயலிகளில் செலவிட்டு வருகின்றனர். ஜூம் செயலியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக, மக்கள் அனைவரும் கூகுள் மீட் செயலி பக்கம் திரும்பியுள்ளனர். இந்நிலையில், கூகுள் மீட் செயலி அனைவருக்கும் இலவசம் என்ற அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து ஜி சூட் துணைத் தலைவர் ஜேவியர் சொல்டெரோ தனது ட்விட்டர் பக்கத்தில், "கூகுளின் வீடியோ கான்ஃபெரன்சிங் மீட் செயலி முற்றிலும் இலவசமாகியுள்ளது. இதை meet.google.com என்ற இணையதளத்தில் மின்னஞ்சல் முகவரி மூலம் அணுகலாம் அல்லது ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் தளத்தில் உபயோகிக்கலாம்.