பிரபல கூகுள் நிறுவனம், கரோனாவுக்கு எதிராக போராடும் இக்கட்டான சூழ்நிலையில் தவறான தகவல்களை எந்த வகையிலும் மக்கள் மத்தியில் சென்றடையக்கூடாது என்பதில் மும்முரமாக உள்ளனர். அதற்காக கூகுள் நிறுவனம் தொடங்கிய கரோனா இணையதளத்தில் ஆன்லைனில் நடைபெறும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து தெளிவான தகவல்களை மக்களுக்கு வழங்கிவருகிறது.
இதுதொடர்பாக, கூகுள் நிறுவனம் எடுத்த ஆய்வில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகளவில் 18 மில்லியன் போலி செய்திகளும், மக்களை ஏமாற்றும் ஃப்ராடு குறுந்தகவல்களும் பகிரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், " கூகிளின் பிரத்யேகக் குழு, தொடர்ச்சியாக ஆன்லைனில் நடைபெறும் அதிநவீன ஹேக்கிங் செயல்பாட்டை கண்காணிக்கின்றது.
பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தொண்டு நிறுவனங்களின் மெசேஜ், கரோனாவுக்கு எதிராக போராடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கான வழிமுறைகள் போன்ற ஃபிஷிங் மின்னஞ்சல்கள் (phishing emails) ஆன்லைனில் சுற்றிவருவதை கண்டுபிடித்துள்ளோம்.