நிஜ வாழ்க்கையில் ஷாப்பிங் செய்ய விரும்பும் தயாரிப்புகளின் தோற்றத்தையும் உணர்வையும் அனுபவிக்க உதவும் ஷாப்லூப் என்ற வீடியோ ஷாப்பிங் தளத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ஏரியா 120’ என்ற பெயரில் சோதனை திட்டங்களுக்காக கூகுளின் உள் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி இப்போது கைபேசியில் கிடைக்கிறது. கணினிப் பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியனாக தலை நிமிருங்கள்: ஜியோ தருகிறது முற்றிலும் இந்திய தயாரிப்பு தகவல் சாதனங்கள்!
நீங்கள் தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்யலாம், பரிந்துரைக்கலாம், காணொலிகளில் இருந்து நேரடியாகப் பொருள்களைத் தேர்வுசெய்ய பிறருக்கு உதவலாம். எல்லா ஷாப்லூப் கானொலிகளும் 90 வினாடிகளுக்குக் குறைவானதாகவே இருக்கும். இந்தச் சேவை புதிய தயாரிப்புகளை ஒரு பொழுதுபோக்கு வழியில் கண்டறிய மக்களுக்கு உதவுகிறது.
”ஒரு பாரம்பரிய மின்னணு வர்த்தகத் தளத்தில் படங்கள், தலைப்புகள், விளக்கங்கள் ஆகியவை மூலம் ஸ்க்ரோலிங் செய்வதை விட ஷாப்லூப்பில் உள்ள அனுபவம் மிகவும் வித்தியாசமான ஒன்று“ என்று கூகுள் கூறியிருக்கிறது.