தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

அந்தரங்க பேச்சை ஒட்டுக் கேட்கும் கூகுள்! - smart Phone

ஸ்மார்ட் போன்களில் உபயோகிக்கும் கூகுள் அசிஸ்டன்ட்(Google Assistant) வசதியின் மூலம் நாம் பேசும் அந்தரங்க தகவல்கள் கசிந்ததைக் கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது.

கூகுள் அசிஸ்டன்ட்

By

Published : Jul 14, 2019, 7:01 PM IST

Updated : Jul 15, 2019, 2:40 AM IST

உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்களுக்கு அப்பாற்பட்ட செயலையும் மிகவும் எளிதாக, அதிவிரைவில் தொழில்நுட்பம் முடித்து விடுகின்றன. ஆனால் அவை மனிதர்களுக்கு சில சமயங்களில் எமனாகவும் மாறும் தன்மை உடையது.

ஸ்மார்ட் போன்களில் நாம் "ஓகே கூகுள்" என்று அழைத்தால் போதும். நமக்கு உதவி செய்யக் கூகுள் அசிஸ்டன்ட் கண்முன்னே வந்து நிற்கும். அதனிடம் நாம் பார்க்க விரும்பியதைக் கூறினால் போதும் அதிவிரைவில் கண்டுபிடித்துத் தரும். இதனால் கூகுள் அசிஸ்டன்ட் வசதியை அதிகளவில் மக்கள் உபயோகித்து வருகின்றனர். மேலும் கூகுள் ஹோம், ஸ்மார்ட் ஸ்பீக்கர் என பல்வேறு ஸ்மார்ட் சாதனங்கள் நம்மை உட்கார்ந்த இடத்திலே வேலையை முடிக்க உபயோகமாக இருக்கிறது.

கூகுள் ஹோம் அசிஸ்டன்ட் சேவை

இந்நிலையில் ஃப்ளாண்டர் செய்தி அளித்த தகவல்படி, கூகுள் அசிஸ்டன்ட் வசதி "ஓகே கூகுள்" என்று சொல்லாமலே நாம் பேசும் அனைத்தையும் கூகுள் வசதியை மேம்படுத்த, அதன் ஊழியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவித்தது. மேலும் அதிர்ச்சி செய்தியாக, பயனாளர்கள் பேசிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்தத்தரக தகவல் கசிந்ததுள்ளது எனத் தெரிகிறது. இதனையடுத்து வீடுகளில் பயன்படுத்தும் கூகுள் ஹோம், ஸ்மார்ட் ஸ்பீக்கர் போன்ற சாதனங்களும் நாம் பேசும் அனைத்தையும் சேமித்து வைப்பதாக தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கேட்டபோது கூகுள் நிறுவனமும் தகவல் கசிந்ததை ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் சரிசெய்யப்படும் எனவும் கூகுள் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Last Updated : Jul 15, 2019, 2:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details