மின்னணு வணிகம் தொடர்பான தகவல்களை சம்மந்தப்பட்ட நாட்டு அரசாங்கங்கள் சேகரித்துவருகின்றன. என்றாலும், பெரும்பாலான நாடுகள் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை இன்னும் வெளியிடவில்லை. மேலும், மின்னணு வர்த்தகம் குறித்த தகவல்களை வெளியிடுபவர்களும், பெரும்பாலும் சர்வதேச நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. அந்தப் புள்ளி விவரங்களும் அடிக்கடி திருத்தப்படுகிறன்றன.
சமீபத்திய முன்னேற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதற்காக, வர்த்தகம் மற்றும் மேம்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு உலகளாவிய மின் வணிகத்தை மதிப்பிடுவதற்கான அதன் வழிமுறையைத் தழுவிவருகிறது. மதிப்பிடும் முறையின் மாற்றங்கள் மற்றும் நாடுகள் 2017ஆம் ஆண்டு தரவுகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் காரணமாக, மின் வர்த்தக மதிப்பீடுகள் கடந்த ஆண்டுகளில், வர்த்தகம் மற்றும் மேம்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகளின் அமைப்பினரால் (United Nations Conference on Trade and Development-UNCTAD) வெளியிடப்பட்ட மதிப்பீடுகளுடன் நேரடியாக ஒப்பிடமுடியாது.
பெரும்பாலான நாடுகள் வணிகத்திற்கும் நுகர்வோருக்கும் இடையேயான தரவுகளைவிட, மொத்த வணிகத்திற்கும், வணிகத்திற்கும் (B2B) இடையேயான தரவுகளையே வெளியிடுகின்றன.
உலகலாவிய அளவில் வணிகத்திற்கும் நுகர்வோருக்கும் இடையேயான தரவு நாட்டின் மொத்த உள்நாட்டு பங்கு வணிகத்திற்கும் நுகர்வோருக்கும் இடையேயான தரவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடுகள் 2018 ஆம் ஆண்டில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 92 விழுக்காடாகக் கணக்கிடப்பட்டுள்ளன.
உலகளாவிய மின் வணிக விற்பனையானது, மொத்த மின் வர்த்தகத் தரவைக்கொண்ட அந்த நாடுகளின், வணிகம் - நுகர்வோர் விகிதத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இது, 2018 ஆம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 71 விழுக்காட்டை குறிக்கிறது.
அந்த வகையில் மின் வணிக விற்பனையின் உலகளாவிய மதிப்பு 2018ஆம் ஆண்டில், 26 டிரில்லியன் டாலரை (26 லட்சம் கோடி டாலர்) எட்டியுள்ளதாக வர்த்தகம் மற்றும் மேம்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCTAD) மதிப்பிடுகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 விழுக்காடு ஆகும்.
இது 2017ஆம் ஆண்டிலிருந்து, 8 விழுக்காடு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. இதுவரை அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய மின் வர்த்தக சந்தையாக உள்ளது. உலகளாவிய மொத்த வணிகத்துக்கும்- வணிகத்துக்கும் இடையேயான மின் வர்த்தகத்தின் மதிப்பு 21 டிரில்லியன் டாலர் ஆகும்.