சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த ஸ்மார்ட் டிவி அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியாகியுள்ளதால், பல முன்னனி டிவி மாடல்களுடன் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது அடுத்த படைப்பாக 2020 கிரிஸ்டல் 4K யுஹெச்டி சிரீஸில் 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் ஆகிய 5 வகைகளில் அறிமுகமாகியுள்ளது. இதுமட்டுமின்றி அன்பாக்ஸ் மேஜிக் 3.0 ஸ்மார்ட்டிவி 32 இன்ச், 43 இன்ச் ஆகிய இரு வகைகளில் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாகப் பேசிய சாம்சங் இந்தியாவின் நுகர்வோர் மின்னணு வணிகத்தின் மூத்தத் துணைத் தலைவர் ராஜு புல்லன் கூறுகையில், "கிரிஸ்டல் 4கே யுஹெச்டி டிவிகளின் புதிய சிரீஸ் இந்திய சந்தையில் தலைமையைப் பலப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
கிரிஸ்டல் 4K யுஹெச்டி டிவி சிறப்பு அம்சங்கள்:
- டிவியை பயனர்கள் தங்களின் குரல் மூலம் இயக்க வசதியாக பிக்ஸ்-பி, அலெக்சா போன்ற சேவைகள் வழங்கப்பட்டுள்ளன
- கிரிஸ்டல் டிவியில் உள்ள Personal Computer Modeஐ கிளிக் செய்வதின் மூலம் டிவியை தனிப்பட்ட கணினியாக மாற்ற முடியும்
- பிரபலமான ஒடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ZEE-5 ஆகியவற்றை எளிதாக அணுக பிரத்யேக பொத்தன் வழங்கப்பட்டுள்ளது
- இதுதவிர, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., பெடரல் வங்கி, எஸ்பிஐ கார்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி டிவி வாங்கினால் 10 விழுக்காடு வரை கேஷ்பேக் அனைத்து மாடல்களிலும் வழங்கப்படுகிறது
- 'மை சாம்சங் மை இஎம்ஐ' திட்டத்தின் மூலம் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு 990 ரூபாய், 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு 1,190 ரூபாய், 49 இன்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு 1,990 ரூபாய் செலுத்தி பயனர்கள் டிவியை வாங்கிக் கொள்ளலாம்.
விலை விவரங்கள்:
கிரிஸ்டல் 4K யுஹெச்டி சிரீஸில் 43 இன்ச் - 44 ஆயிரத்து 400 ரூபாய்,