டென்மார்க்கை தலைமையிடமாகக் கொண்ட ஜாப்ரா நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பான ஜாப்ரா எவால்வ்2 30 (Jabra Evolve2 30) ஹெட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹெட்போனின் விலையாக 10 ஆயிரத்து 922 ரூபாய் நிர்ணயித்துள்ளனர். இதில் இரண்டு மைக்ரோஃபோன்களும், 28mm ஸ்பீக்கர்ஸ்களும் இடம்பெற்றுள்ளன.
இதில் இரண்டு மைக்ரோபோன்கள் வசதி உள்ளதால், கால் செய்யும் சமயங்களில் குரலை மிகவும் துல்லியமான வகையில் கேட்டிட முடியும். லாக்டவுன் சமயங்களில் நாள்தோறும் ஆன்லைன் மீட்டிங்கில் பங்கேற்கும் நபர்களுக்கு, இந்த ஹெட்போன் மிகவும் உபயோகமாக இருக்கும். மேலும், மியூட் ஆன், ஆஃப் பட்டன்களும் உள்ளன.