உலக அளவில் பேஸ்புக் நிறுவனம் சமுக வலைத்தளங்களில் யாராலும் தொடமுடியாத உச்சத்தில் உள்ளது. பேஸ்புக் உபயோகிக்கும் பயனாளர்களின் எண்ணிக்கையோ இளைஞர்களில் தொடங்கி முதியவர்கள் வரை அதிகரித்து வருகின்றனர். ஒருவரிடம் பேஸ்புக்கில் கணக்கு இல்லை என்று கூறும் போது ஏளனமாய் பார்க்கும் உலகத்தில் வாழ்ந்து வருகிறோம்.
பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் கோடி அபராதம்!
வாஷிங்டன்: பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட வழக்கில் பேஸ்புக் நிறுவனத்துக்கு அமெரிக்க வர்த்தக ஆணையம் ரூ.35 ஆயிரம் கோடி அபராதமாக விதித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பிற்கு ஆதரவு திரட்டுவதற்காக பேஸ்புக் பயன்படுத்தும் 8.70 கோடி பேரின் தகவல்களைச் சட்டவிரோதமாக கேம்பிரிட்ஜ் அனாலிடிக் நிறுவனம் திருடியுள்ளது என்னும் அதிர்ச்சி சம்பவம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்காக பேஸ்புக் நிறுவனமும் தங்கள் தவறினை ஒப்புக்கொண்டு பகீரங்கமாக மன்னிப்பும் கேட்டது.
இது குறித்து அமெரிக்க வர்த்தக ஆணையம், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பேஸ்புக் பயனாளர்கள் தகவல்கள் திருடப்பட்டது உறுதியாகியானதை தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனத்திற்கு ஐந்து பில்லியின் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ. 35000 கோடி) அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையினை நீதித்துறை ஒப்புதல் அளித்தவுடன் அபராதம் செலுத்தியாக வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.