தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஊழியர்கள் மலிவான பகுதியில் குடியேறினால் ஊதியம் குறைக்கப்படும் - ஃபேஸ்புக் சிஇஓ! - Facebook employees would work from home five to 10 years from now

சான் பிரான்சிஸ்கோ: ஃபேஸ்புக் ஊழியர்கள் மலிவான பகுதியில் குடியேறினால் ஊதியம் குறைக்கப்படும் என ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

பேஸ்புக்
பேஸ்புக்

By

Published : May 23, 2020, 11:08 PM IST

கரோனா தொற்றின் காரணமாக பல முக்கிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தப்படியே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில், உலகளவில் மிகப்பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்களும் 2 மாதங்களாக வீட்டிலிருந்தே பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதற்காக பெரும்பாலானோரை வீட்டிலிருந்தபடியே 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணி செய்ய வைக்க திட்டமிட்டுளோம்.

மேலும், ஊழியர்கள் சிலிக்கான் வேலி பகுதியிலிருந்து வேறு இடங்களில் குடியேறினால் அதற்கேற்ப சம்பளத்தில் மாற்றம் ஏற்படும்" என அறிவித்துள்ளார். இதன்படி, 50 ஆயித்துக்கும் அதிகமான ஃபேஸ்புக் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்றுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:EMI செலுத்த ரிசர்வ் வங்கி அறிவித்த காலநீட்டிப்பு வரவேற்கத்தக்கது - ஹர்தீப் சிங் பூரி

ABOUT THE AUTHOR

...view details