தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'நிறுத்துங்க ஆதிக்கத்த நிறுத்துங்க' - அமேசான் நிறுவனருக்கு எலான் மஸ்க் கண்டனம்

வாஷிங்டன்: அமேசான், ப்ளூ ஆர்ஜின் ஆகிய நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் வர்த்தகச் சந்தையில் தனது தனி ஆதிக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

Elon Musk
Elon Musk

By

Published : Jun 5, 2020, 9:50 PM IST

உலகின் முன்னணி இ - காமர்ஸ் நிறுவனமான அமேசானின் நிறுவனர் ஜெஃப் பேசோஸை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறார். செவ்வாய் கிரத்திற்கு மனிதர்களைக் குடிபெயர்க்க வேண்டும் என்ற கனவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் முழுமூச்சாக எலான் மஸ்க் ஈடுபட்டுவருகிறார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அமேசான் நிறுவனருக்கும் எலான் மஸ்குக்கும் மோதல் போக்கு நீடித்துவருகிறது.

தற்போது அதன் தொடர்ச்சியாக, நியூயார்க் டைமஸ் செய்தியாளர் அலெக்ஸ் பெரென்சன் "Unreported Truths about COVID-19 and Lockdowns: Part 1: Introduction and Death Counts and Estimates" என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை ஜெஃப் பெசோஸின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் சென்சார் செய்துள்ளது.

இதை வன்மையாகக் கண்டித்து எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமேசான் நிறுவனத்தின் இந்தச் செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சந்தையை ஆக்கிரமித்துள்ள அந்த நிறுவனத்தின் தனி ஆதிக்கம் நிறுத்தப்படும் வகையில், அது உடைபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மஸ்க்கின் இப்பதிவுக்குப் பின் புத்தகத்தை மீண்டும் தளத்தில் வெளியிடுவோம் என அமேசான் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பாரத ஸ்டேட் வங்கியின் வருவாய் நான்கு மடங்கு அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details