தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

போலி நிறுவனங்கள் மூலம் ரூ.2,000 முதலீடு - அதிர வைக்கும் யெஸ் பேங்க் மோசடி - ரானா கபூர் யெஸ் பேங்க்

டெல்லி: போலி நிறுவனங்கள் மூலம் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு முதலீடுகளை யெஸ் வங்கி நிறுவனர் மேற்கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரானா கபூர்
ரானா கபூர்

By

Published : Mar 8, 2020, 6:16 PM IST

கைது செய்யப்பட்ட யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூரிடம் அமலாக்கத் துறை மேற்கொண்ட 20 மணிநேர விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

ரானா கபூருக்கு தொடர்புடைய லண்டன் சார்ந்த குடும்பத்தினருக்கு சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ள அமலாக்கத் துறை, அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

மேலும், ஏற்கனவே ஊழல் புகாரில் சிக்கிய டி.எச்.எஃப்.எல். நிறுவனத்திடம் இருந்து சுமார் 600 கோடி ரூபாய் நிதியை ரானா கபூர், அவரது மனைவி, மூன்று மகள்கள் ஆகியோரின் வங்கிக் கணக்களுக்குச் செலுத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. டி.எச்.எஃப்.எல் நிறுவனத்திற்கு யெஸ் வங்கி சார்பில் 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ரானா கபூர் குடும்பம் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் இருந்து ரானா கபூர் வாங்கிய விலைமதிப்புமிக்க 44 ஓவியங்களையும் அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது. இன்று காலை கைதுசெய்யப்பட்ட ரானா கபூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பர்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:நல்ல வேலை ரூ.265 கோடி தப்பிச்சுது; வதோதரா நகராட்சி நிர்வாகம் நிம்மதி

ABOUT THE AUTHOR

...view details