நாடு முழுவதும் கரோனா பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இம்மக்களையும் பேரிடர் தாக்கும் அபாயம் எழுந்துள்ளது.
குறிப்பாக பெரு நகரங்களில் உள்ள சேரிப் பகுதிகளில் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துவருகின்றனர். கரோனா தடுப்பிற்கான முக்கிய அம்சமாக சமூக இடைவெளி உள்ள நிலையில், மும்பை தாராவிப் பகுதிகளில் பத்துக்கு பத்து இடத்தில் எட்டு பேர் வசிப்பது வாடிக்கையாக உள்ளது. தற்போது தாராவில் பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள சேரிப் பகுதிகள் உருவாக்கம் குறித்து டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். நகர்ப்புற நிர்மாணம், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்பவர்கள் இத்தகைய சூழல் உருவாவதற்கு வெட்கப்பட வேண்டும். மும்பையின் வர்த்தகமையமாகக் கருதப்படும் தாராவிப் பகுதிதான் ஆசியாவின் மிகப் பெரிய சேரிப் பகுதியாக கருதப்படுகிறது.
இந்த கரோனா பேரிடர் மூலம் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதைப் பயன்படுத்தி நாட்டில் அனைத்து குடிமக்களுக்கு குறைந்தவிலை வீட்டுமனை கட்டித்தர திட்டமிட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரிந்த ஊழியருக்கு கரோனா!