உலகில் வாட்ஸ்அப் உபயோகிக்கும் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர். தற்போது அருகிலிருக்கும் மனிதர்களுக்கு கூட வாட்ஸ்அப் மெசஜ் தான் செய்கிறோம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய வசதிகளை வெளியிட்டுவரும் வாட்ஸ்அப் நிறுவனம், தனது புதிய முயற்சியாக டார்க் மோட் (DARK MODE) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது அனைத்து புதிய வசதிகளையும் பிட்டா வெர்ஷன் மக்களுக்குத் தான் முதலில் அளிக்கப்பட்டு சோதனை செய்வார்கள். அதில் எந்தக் குறைபாடும், பிரச்னையும் இல்லை என்று தெரிந்த பிறகு தான், அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும்.
பயனாளர்கள் வாட்ஸ்அப்பில் டார்க் மோட் ஆன் செய்தால், டார்க் கிரே மற்றும் வெள்ளை நிறத்தில் திரை மாறிவிடும். இதனால், டிஸ்பிளே கலர் குறைந்து, வாடிக்கையாளர்கள் இரவு நேரத்தில் படிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.