மும்பை: மாநில நுகர்வோர் மன்றம் தீபக் கோத்தாரி எனும் பயனாளிக்கு காப்பீடு நிலுவைத் தொகையான ரூபாய் 26.67 லட்சத்தை செலுத்த உத்தரவிட்டுள்ளது.
டாடா நிறுவனத்தின் புதிய கார் ’அல்ட்ராஸ்' சென்னையில் அறிமுகம்!
மும்பையைச் சேர்ந்த தீபக் கோத்தாரி எல்ஐசி நிறுவனத்தின் ஜீவன் சரல் காப்பீட்டு திட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்கான காப்பீட்டுத் தொகையான ரூபாய் 13.65 லட்சத்தைச் செலுத்தியுள்ளார். இந்த காப்பீட்டு திட்டத்தின் அம்சமாக, காப்பீடு முடியும் காலத்தில் ரூபாய் 25 லட்சமும், கூடவே பயனாளிக்கு மரணம் நிகழ்ந்தால் ரூபாய் 3.94 லட்சமும், விபத்து நடந்து படுகாயமடைந்தால் ரூபாய் 15 லட்சமும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், காப்பீட்டின் காலம் முடிவடைந்த பின்னர், எல்.ஐ.சி தரப்பில் ரூபாய் 3.94 லட்சமும், அதன் லாபமாக 1.68 லட்சத்தை மட்டுமே தர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்துபோன கோத்தாரி நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.