வங்கியில் கடனாக வாங்கிய ரூ. 2,348 கோடியை திரும்பச் செலுத்தாமல் இருக்கும் பூஷண் ஸ்டீல் மற்றும் பூஷண் பவர் நிறுவனங்களின் மீது சி.பி.ஐயில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரும்பு உற்பத்தி செய்யும் பூஷண் ஸ்டீல், மின் உற்பத்தி நிறுவனமான பூஷண் பவர் நிறுவனங்களின் மீதும் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் பூஷன் ஸ்டீல் நிறுவனம்! - Bushan steel in heavy loss
டெல்லி: வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் பூஷண் ஸ்டீல், பூஷன் பவர் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்து வருவதால் பெற்ற கடன் சுமார் ரூ.2,348 கோடியை கட்ட முடியாமல் தவித்து வருகிறது.
பூஷன் ஸ்டீல்
இதன் அடிப்படையில், சி.பி.ஐ மீதும், அதன் இயக்குநர்கள் மீதும், அடையாளம் தெரியாத அரசு அலுவலர்கள் மீதும், சில தனி நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி சண்டிகர் கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் அந்த நிறுவனத்தின் அலுவலகங்கள், முக்கிய அலுவலர்களின் வீடு, இயக்குநர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளார்கள்.