நியூயார்க்: இந்த வாரத்தில் மட்டும் 12ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கரோனா பாதிப்பால் தொழில் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்த நெருக்கடியை சமாளிக்கவும், செலவுகளை குறைக்கவும் ஊழியர்களை வெளியேற்றுவதாக பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மறுபுறம், ஊழியர்களின் ஊதியத்தை குறைப்பதாகவும் சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இச்சூழலில், போயிங் நிறுவனம் 12,000 ஊழியர்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது. கோவிட்-19 தாக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தொழில்துறைகளில் விமானப் போக்குவரத்து துறையும் ஒன்று.
வீட்டில் இருக்கச் சொல்லி ஊழியர்களுக்குக் கூடுதலாக ஆயிரம் டாலர்களை அளிக்கும் கூகுள்
அமெரிக்காவைச் சார்ந்த முன்னணி விமான உற்பத்தி நிறுவனமான போயிங், இந்த வாரத்தில் 6,770 ஊழியர்களை வெளியேற்றவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வரும் வாரங்களில் 5,520 ஊழியர்களை தாமாக சலுகைகளை அறிவித்து வெளியேறுவதற்கு முடிவுசெய்துள்ளது.