டெல்லி:உள்நாட்டுபோட் நிறுவனத்தில், அமெரிக்க நிறுவனமான வார்பர்க் பிங்கஸ் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் 731 கோடி ரூபாய் மதிப்பில் இந்த முதலீடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் நிறுவன தயாரிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிகம் கவனம் செலுத்த இருப்பதாக 'போட்' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக 2016ஆம் தோற்றுவிக்கப்பட்ட போட் நிறுவனம், ஹெட்ஃபோன்ஸ், இயர்ஃபோன்ஸ், ஸ்மார்ட்வாட்ச், ஸ்பீக்கர்ஸ், சார்ஜர்ஸ், பிரிமியம் கேபில்ஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்துவருகிறது. மொத்தம் 150 பணியாளர்களைக் கொண்டு நிறுவனம் தற்போது இயங்கி வருகிறது.