தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக களமிறங்கும் ப்ளூடார்ட் நிறுவனம் - வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் லாஜிஸ்டிக்ஸ்

மும்பை: வெளிநாட்டில் இந்தியர்களுக்கு மருத்துவ சேவை வழங்க ப்ளூடார்ட் நிறுவனம் லாஜிஸ்டிக்ஸ் சேவை வழங்கவுள்ளது.

Blue Dart
Blue Dart

By

Published : Apr 28, 2020, 9:04 PM IST

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரத்தன்மை காரணமாக, அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து சேவைகள் மட்டுமே இயங்கி வரும் நிலையில், தங்கு தடையின்றி இயக்கம் நடைபெற, பல்வேறு தனியார் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு முறையான மருத்துவ சேவைகள் நடைபெற அரசுடன் சேர்ந்து ப்ளூடார்ட் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இது குறித்து ப்ளூடார்ட் நிறுவனத்தின் மேலாளர் கேத்தன் குல்கர்னி பேசுகையில், 'லாக்டவுன் காலத்தில் அரசுடன் இணைந்து செயலாற்ற ப்ளூடார்ட் நிறுவனம் முன்வந்துள்ளது. ஏற்கெனவே டன் கணக்கான அத்தியாவசியப் பொருட்களை நாடு முழுவதும் கொண்டு சேர்த்து வருகிறோம்.

மருத்துவ அவசர நிலை, தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் அரசும் மருந்தக நிறுவனங்களும் தங்கள் பணிகளை சீராக மேற்கொண்டு வருகின்றன. அவர்களின் கரங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு மருத்துவப் பொருட்களைக் கொண்டு சேர்க்க அனைத்து முயற்சிகளையும் ப்ளூடார்ட் நிறுவனம் மேற்கொள்ளும்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கச்சா எண்ணெய்: 20 விழுக்காடு விநியோக வீழ்ச்சியால் விலை கடும் சரிவு!

ABOUT THE AUTHOR

...view details