உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பெருளாதார மந்தநிலை இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. இது 'தேசிய அபாயம்' என்று எதிர்க்கட்சிகள்விமர்சித்தன. இதையடுத்து மத்திய அரசு காா்ப்பரேட் வரியை 10 விழுக்காடு வரை குறைத்தது. இதனால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகாித்துள்ளன.
இந்த மாதத்தில் மட்டும் சுமாா் ஏழாயிரம் கோடிவரை அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.
இந்தக் காா்ப்பரேட் வரி குறைப்பால் ஐ.டி.சி. சிகரெட் தயாரிப்பு நிறுவனம் பெரும் லாபம் ஈட்டியுள்ளது. அதாவது அந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் ஏழு விழுக்காடுவரை வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் அதிகாித்துவருகின்றனர்.
நடப்பு நிதியாண்டில் ஐ.டி.சி. பங்குகளில் அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும். ஐ.டி.சி. சிகரெட்டுகள் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் மூன்று விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது.