மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிதிநிலை அறிக்கையின் பொது, ரயில்வே துறைக்கென்று ஒரு பெரும் அளவுத் தொகையை ஒதுக்கினார். புது புது திட்டங்களை ரயில்வே துறையில் அறிமுகப்படுத்துவன் மூலம் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்ற கணிப்பின் மூலம் ரயில்வே துறை பெரும் அளவுத் தொகையை ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி, 2017-18 நிதியாண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை, ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் 20,000 கோடி ரூபாய் வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்த பின், அதே நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் ரயில்வே துறை லாபம் ஈட்டியது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு, ரயில்வே துறைக்கு வழங்கிவந்த 20,000 கோடி ரூபாய் பாதியாக குறைந்ததால், ரயில்வே துறை சிக்கலை சந்தித்து வருகிறது.
இந்தியப் பொருளாதாரம் சரிவை காண்பதாலும், நிதிப்பற்றாக்குறையாலும் முழுமையான தொகையை ரயில்வே துறைக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த பற்றாக்குறைக்கெல்லாம் தீர்வு கண்டு ரயில்வே துறைக்குப் போதுமான தொகையை வழங்குவோம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.