கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள கோலார் மாவட்டத்தில் 3 ஆயிரம் கோடி முதலீட்டில் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தொடங்கவுள்ளது. 43 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவிலேயே பெரிய ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையாக உருவாகவுள்ளதன் மூலம், சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை! - ஐபோன்
பெங்களூரு: இந்தியாவின் உற்பத்தித்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை ஆப்பிள் நிறுவனம் தொடங்கவுள்ளது.
இது குறித்து ஆப்பிள் நிறுவன செய்தித் தொடர்பாளர், எதிர்காலத் திட்டத்துடன் உள்நாட்டு வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பெங்களூரில் இந்தத் தொழிற்சாலையை தொடங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் எனக்கூறியுள்ளார். ஆப்பிள் நிறுவனம் மெல்ல மெல்ல இந்தியாவில் ஆழமாக தடம் பதிக்க தொடங்கியுள்ளது. சுமார் 45 கோடி ஸ்மாட்போன் பயனாளர்கள் கொண்ட இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தாக்கம் வாடிக்கையாளர்களிடம் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சீனாவில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விலைக்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரைவில், இந்திய வாடிக்கையாளர்களையும் கவர்ந்திழுக்க இது போன்ற அறிவிப்பு வரலாம் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.