பீனிக்ஸ் (அமெரிக்கா):ஆப்பிள் நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் 839 கோடி ரூபாயை கொண்டு பழைய ஐபோன் பேட்டரிகளின் ஆயுளை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளது.
ஐபோன் பேட்டரி குறைபாடு: ரூ.839 கோடி செலவிடும் ஆப்பிள் நிறுவனம்! - ஆப்பிள் ஐபோன் பேட்டரி
பழைய ஐபோன்களின் பேட்டரிகள் மோசமடைவதால் அதனை சரிசெய்ய ஆப்பிள் நிறுவனம் சுமார் 839 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. புதிய வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை சிதைக்காத வண்ணம் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
apple iphone battery
ஆப்பிள் நிறுவனம் 2017ஆம் ஆண்டு ஒரு புதிய பதிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து கைபேசிகளில் பேட்டரிகளின் திறன் மோசமடைந்ததாக பயனர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் வந்தது. இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனம் பழைய பேட்டரிகளை மாற்றி கொடுத்தது.
இதேநிலை தற்போதைய மென்பொருள் புதுப்பித்தலின்போது பழைய ஐபோன் கைபேசிகளில் நிகழ்ந்துள்ளது. இதனை சரிசெய்ய ஆப்பிள் நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் 839 கோடிக்கு மேல் செலவிடவுள்ளது.