உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமும், செல்ஃபோன்களில் முதன்மை பிரான்டாகவும் விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து அதன் தலைமை வடிவமைப்பாளர் ஜோனி ஐவி பதவி விலகியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்துக்கு 'டாடா' காட்டிய ஆஸ்தான வடிவமைப்பாளர் - I phone
வாஷிங்டன்: முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் பதவியிலிருந்து ஜோனி ஐவி விலகியுள்ளார்.
apple
அந்நிறுவனத்தின் தொடக்க காலத்திலிருந்து சுமார் 30 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்துவந்த ஐவி, ஆப்பிள் பிரான்டின் ஐபாட், ஐஃபோன், மேக்புக் மடிக்கணினி, ஆப்பிள் வாட்ச், ஏர்பாட் உள்ளிட்ட அனைத்து பிராண்டுகளையும் வடிவமைத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது பதவி விலகியுள்ள ஐவி, லவ் பார்ம் என்ற பெயரில் சொந்தமாக நிறுவனம் ஒன்றைத் தொடங்கவுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் உலகிலேயே அதிக லாபம் ஈட்டிய விற்பனை பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.