தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவது ஏன்? - அன்புமணி இராமதாஸ் - அன்புமணி இராமதாஸ்

சென்னை: மரங்கள் நிறைந்த தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்கக்கூடாது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Anbumani
Anbumani

By

Published : Oct 15, 2020, 7:26 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில் குப்பை அள்ளுவதற்கான ஒப்பந்தம் ‘அர்பசெர்’ என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்நிறுவனத்திற்கான அலுவலகங்களை கட்டவும், வாகன நிறுத்துமிடங்களை அமைக்கவும் சென்னை சோழிங்கநல்லூரில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் பழத்தோட்டம்' எனும் இடத்தை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது.

சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தில் மாமரம், பனைமரம், வேப்பமரம், ஆலமரம், புங்கன்மரம், முந்திரி, நாவல் என 250-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன.

சென்னையில் குப்பை அள்ளும் நிறுவனத்திற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் எந்த தவறும் இல்லை. இன்னும் கேட்டால் அது அத்தியாவசியமான ஒன்று தான். ஆனால், சோழிங்கநல்லூர் பழத்தோட்டம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமாகவும், மாநகராட்சிக்கு சொந்தமாகவும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கும் நிலையில் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவது ஏன்? அங்குள்ள 250-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட முனைவது ஏன்? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் வினா.

எனவே, சென்னை சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக வேறு நிலத்தை ஒதுக்கி விட்டு, சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை மியாவாக்கி முறையில் அடர்வனமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details