நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த இருவருடங்களாக பெரும் பாதிப்பிற்குள்ளானது. குறிப்பாக உற்பத்தித் துறை பெருமளவிலான தேக்கநிலையைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக வாகன விற்பனையானது ஏழு மாதங்களாகத் தொடர் சரிவை சந்தித்துவருகிறது.
வாகனத்திற்கான ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க வேண்டும் - ஆனந்த் மகேந்திரா - economy
நாட்டின் பொருளாதார நடவடிக்கையை மேம்படுத்த வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைக்க வேண்டும் என, மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா வலியுறுத்தியுள்ளார்.
2001ஆம் ஆண்டுக்குப்பின் நாட்டின் வாகன விற்பனை இத்தகைய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இந்த தேக்க நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ளது. அதில், தொடர் விளைவாக ஏற்பட்டுள்ள இந்த தேக்க நிலையைப் போக்க ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதுவே வாகன உற்பத்தித் துறையை உயர்த்த ஒரே வழி எனத் தெரிவித்துள்ளார் ஆனந்த மகேந்திரா.