இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை தற்காலிகமானது என்றும், அரசாங்கம் அண்மையில் எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவிருக்கும் காலாண்டுகளில் பொருளாதாரத்தின் போக்கை மாற்றியமைக்க உதவும் என்றும் இந்தியப் பெருமுதலாளி முகேஷ் அம்பானி சவுதி அரேபியாவில் நடைபெற்ற 'பாலைவனத்தில் டாவோஸ்' என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மந்த நிலையை சீரமைக்கும் மோடியின் திட்டங்கள் - அம்பானி - reforms undertaken to reverse trend
சவுதி அரேபியா: பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள் அடுத்த சில காலாண்டுகளில் பலனைத் தரும் என்று 'பாலைவனத்தில் டாவோஸ்' என்று அழைக்கப்படும் சவுதி அரேபியாவின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்தியப் பெருமுதலாளி முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானி
இந்திய தபால் துறையின் விரிவுபடுத்தப்பட்ட பேமெண்ட்ஸ் பேங்க் சேவை விரைவில்...
மேலும், “கடந்த சில மாதங்களில் எடுக்கப்பட்ட அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும், தற்போது சரிவாகத் தோன்றினாலும், வரும் சில காலாண்டுகளில் இது தலைகீழாக மாறும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.