டெல்லி: தங்கள் தளத்தில் பத்தாயிரம் ரூபாய் வரை பொருட்கள் விற்பனை செய்துவரும், சிறுகுறு விற்பனையாளர்களுக்கு ஜூன் மாதம் முடியும் வரை, தரகு தொகையில் 50 விழுக்காடு சலுகை அளிக்க அமேசான் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
இதேபோல அமேசான் இந்தியாவின் போட்டி நிறுவனமான ஃப்லிப்கார்ட், தங்கள் விற்பனையாளர்கள் பொருட்களை பாதுகாப்பதற்கான செயல்பாட்டிலிருக்கும் கிடங்கு கட்டணத்தை ஏப்ரல் 30ஆம் தேதி வரை வசூலிக்கமாட்டோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை...!
தங்களிடம் பதிவுபெற்றிருக்கும் 6 லட்சத்துக்கும் மேலான சிறு குறு விற்பனையாளர்கள் தற்போது அனுபவித்து வரும் இன்னல்களைப் போக்க, தரகு தொகையில் 50 விழுக்காடு அளவிற்கு சலுகை தர முடிவெடுத்துள்ளதாக அமேசான் நிறுவனத்தின் இந்திய துணைத் தலைவர் (வியாபாரப் பிரிவு) கோபால் பிள்ளை தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனம் ஏற்கனவே கடந்த மாதம் ஊரடங்கு காரணமாக இணைய வணிகம் அதிகரிக்கும் என்ற நோக்கில் ஒரு லட்சம் பணியாளர்களை பணியமர்த்தியது. இந்த மாதம் மேலும் 75 ஆயிரம் பேரை பணியமர்த்துகிறது.
ஐடி நிறுவனங்களுக்கு நான்கு மாத வாடகையில் விலக்கு!
இதற்கிடையில் சில இடங்களில், அந்நிறுவனத்தின் கிடங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அமேசான் நிறுவன ஊழியர்கள் 50 பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.