ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 5ஜி இணைய சேவை சோதனையைஹைதராபாத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டது. வர்த்தக ரீதியாக நடத்தப்பட்ட இந்தச் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் சோதனை முயற்சிகளை வெற்றிகரமாக முடித்த முதல் நிறுவனமாக ஏர்டெல் திகழ்கிறது.
இந்நிலையில், 5ஜி சேவை அறிமுகத்தை வேகப்படுத்துவதற்காக குவால்காம் இந்தியா பிரைவட் லிமிடெட் நிறுவனத்துடன், தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்விரு நிறுவனங்களின் ஒத்துழைப்பு மூலம், 5ஜி சேவையின் தரத்தை மேலும் வலுப்படுத்தி, வணிக நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும் ஜிகாபைட் வேகத்தில் பிராட்பேண்ட் இணைப்பை வழங்க வழி செய்கிறது.