தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இழப்பைச் சந்தித்துள்ள இந்திய விமான சேவை நிறுவனங்கள் - tamil news

சிங்கப்பூர்: சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள கணிப்பில் கரோனா நோய்க் கிருமித் தொற்றின் காரணமாக, விமான நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Airlines loss
Airlines loss

By

Published : Apr 25, 2020, 1:50 AM IST

இந்தியாவில் விமான நிறுவனங்கள் ரூ. 85 ஆயிரத்து 120 கோடி வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும்; 29 லட்சம் வேலைகள் ஆபத்தில் உள்ளன என்றும் சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகத்தின் சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள கணிப்பில், கரோனா நோய்க் கிருமித் தொற்றின் காரணமாக விமான நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14 அன்று, ஐ.ஏ.டி.ஏ புதிய மதிப்பீட்டை வெளியிட்டது. அதில், 2020ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் உலகளாவிய விமானப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாயில் ரூ. 23 லட்சத்து 86ஆயிரத்து 400 கோடி இழப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

நெட்பிளிக்ஸை காலி செய்ய யூடியூப் எடுத்துள்ள அதிரடி முடிவு!

இதுவே 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 55% விழுக்காடு சரிவாகும் சரிவு. ஆசிய பசிபிக் விமான நிறுவனங்கள் மிகப்பெரிய வருவாய் வீழ்ச்சியைக் காண்டுள்ளது. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் ரூ. 8லட்சத்து 58ஆயிரத்து 800 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.

மேலும், ஆசிய பசிபிக் பகுதியில், விமான சேவை நிறுவனங்களில் உள்ள 112 லட்சம் வேலைகளுக்கு ஆபத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details