கடந்த 5ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் முக்கிய அம்சமாக நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளைச் சீர்செய்ய முக்கிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார். அரசின் பங்குகளை குறிப்பிட்ட சதவீத அளவை தனியாருக்கு விற்பது, ஒரு வேலை முடிந்தால், ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவனத்தையும் தனியாருக்கு விற்பது ஆகிய இரு நடவடிக்கையை அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதற்காக 1.05 லட்சம் கோடி ரூபாய் இலக்கையும் நிர்ணயித்துள்ளது.
'எங்கள் எதிர்காலம்???' ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க ஊழியர் சங்கம் எதிர்ப்பு
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் ஏர் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளதாக, நிதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு ஏர் இந்தியாவின் ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பெரும் நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த முடிவுக்கு அந்நிறுவனத்தின் ஊழியர் சங்கங்கள் தற்போது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவின் 13 ஊழியர் சங்கங்களின் உறுப்பினர்களுடன் அந்நிறுவனத்தின் இயக்குனர் அஸ்வனி லோஹானி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அரசின் தனியார் மைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. பணி இழப்பு, சம்பளம், சேம நலனில் உள்ளிட்டவற்றில் சிக்கல் ஏற்பட்டு ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர், நிதியமைச்சருடன் ஆலோசனைக்கூட்டம் ஒன்றை விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.