சாலையில் எடுத்த புகைப்படத்தை வெளிநாட்டில் எடுத்தது போல், எளிதில் மாற்ற இளைஞர்களுக்கு அடோப் போட்டோஷாப் சாஃப்ட்வேர் தான், உதவியாக இருந்தது. கிராஃபிக்ஸ் டிசைன்ஸை தயாரிக்க சாஃப்ட்வேரில் பல மாற்றங்களைப் பயனர்கள் எதிர்பார்ப்பதால், புதிய வசதிகள் அடங்கிய போட்டோஷாப் வெர்ஷனை அவ்வப்போது அடோப் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
அந்த வகையில், அடோப் நிறுவனம் ஐபேட்டில் போட்டோஷாப் சாஃப்ட்வேரை வைத்திருக்கும் பயனர்களுக்கு, முக்கியமான இரண்டு புதிய வசதிகளை இருக்கும் வெர்ஷனை வெளியிட்டுள்ளது.
டிஸ்பிளேவில் படங்களை பென்சில் ஸ்டைலஸ் மூலம் வரையும் போது, ஏற்படும் அழுத்தத்தினை பயனரால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், புதிய வசதி மூலம் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். நாம் வரையும் கோடு மெலிசாக இருக்க வேண்டும் என்றாலோ அல்லது தடினமாக இருக்க வேண்டும் என்றாலோ முடிவு செய்யலாம். இதே போல், புகைப்படங்களில் வெளிச்சத்தை அதிகரிக்கவும், நிறத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் வசதியையும் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆப்பிள் ஐஓஎஸ் 14 இயங்குதளத்தின் ஆகுமெண்டட் ரியாலிட்டி செயலி குறித்த தகவல் கசிவு!