தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

புதிய ஐ-பேட் மாடல்களை வெளியிடும் ஆப்பிள்! - Apple earpods

ஆப்பிள் நிறுவனம் 10.8 இன்ச் டிஸ்பிளே, 8.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட இரண்டு புதிய ஐ-பேட்களை வெளியிடவுள்ளது.

Apple
Apple

By

Published : Jun 30, 2020, 3:00 PM IST

கடந்த வாரம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில், ஆப்பிள் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐஓஎஸ் 14, ஐ-பேட் ஓஎஸ் 14, வாட்ச் ஓஎஸ் 7, MacOS உள்ளிட்டவை குறித்த பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஐ-பேட் மாடல்களை வெளியிடவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 10.8 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்ட புதிய ஐ-பேட் மாடல் இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 8.5 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்ட மற்றொரு புதிய ஐ-பேட் மாடல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்றும் ஆப்பிள் நிறுவனம் குறித்த தகவல்களை வெளியிடும் மிங்-சி குவோ தெரிவித்துள்ளார்.

இதுதவிர, ஆப்பிள் ஐபோன்களின் அடுத்த மாடலான ஐபோன் 12 உடன் ஆப்பிள் இயர் பாட்களும் (Apple earpods) பவர் அடாப்டர்களும் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஆப்பிள் இயர் பாட்களின் அடுத்த மாடலும் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஆப்பிள் வெளியிட்டுள்ள புதிய ஐஓஎஸ் 14 வெர்ஷன்!

ABOUT THE AUTHOR

...view details