ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஃபைபர் நெட் இன்டர்நெட் திட்டத்தை முதல் முறையாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, அறிமுக சலுகையாக 30 நாட்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
30 நாட்களுக்கு இலவசமாக ஃபைப்பர் நெட் வழங்கும் ஜியோ! - jio new plan
சென்னை: ஜியோ ஃபைப்பர் நெட் இணையதள சேவையை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுக சலுகையாக 30 நாட்களுக்கு அதிவிரைவு இணையதள சேவை இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில், வாடிக்கையாளர்களுக்கு இணையதள வேகம் 150 எம்பிபிஎஸ் (mbps) வேகத்தில் இருக்கும். இதற்கு மேலாக நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜி5 உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுக்கான சந்தா கட்டணம் இல்லாமல் சேவை வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி 30 நாட்களுக்கு இலவசமாக இணையதள சேவையை பயன்படுத்திவிட்டு தேவை இல்லை என திரும்ப வழங்கினாலும் அதனை எந்த கேள்வியும் கேட்காமல் திரும்ப எடுத்துக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இத்திட்டத்தின்படி இலவச வாய்ஸ் கால், 150 எம்பிபிஎஸ் (mbps) வேகத்தில் அன்லிமிட்டட் இன்டர்நெட், 4K செட்டாப் பாக்ஸ், வாய்ஸ் சர்ச் ரிமோட் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்படும். இந்நிறுவனம் 399 ரூபாயில் தொடங்கி 699,999,1499 என்ற திட்டங்களில் ஃபைபர் நெட் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.