தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'ஃபேஸ்புக்கை முடக்க அமெரிக்க தலைவர்கள் சதி?' - பேஸ்புக்கை சிதைக்க சதி

வாஷிங்டன்: ஃபேஸ்புக் நிறுவனத்தை முடக்க அமெரிக்க அரசியல் தலைவர்கள் திட்டமிட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டிய அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், எந்த ஆபத்தையும் சட்ட ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Mark

By

Published : Oct 4, 2019, 1:45 PM IST

ஃபேஸ்புக் நிறுவனத்தை மேம்படுத்துவது குறித்து ஜூலை மாதம் நிறுவன ஊழியர்களுடன் கூட்டம் நடந்துள்ளது. அப்போது, அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் பல்வேறு தகவல்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள்:

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எலிசபெத் வாரன், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஃபேஸ்புக் நிறுவனம் சட்ட சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என நினைக்கிறேன்.எந்த ஆபத்தையும் சட்ட ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

சீன நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டாக் செயலிக்கு சவால்விடும் வகையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் லாசோ (Lasso) செயலியை மேம்படுத்த வேண்டும்.

பொய் செய்திகளைப் பகிர்வது தொடர்பான பிரச்னையில் கவனம் செலுத்தப்படும். அத்துறையை கவனிக்கும் ஊழியர்களின் பிரச்னைகளிலும் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, 2006ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் சந்தித்த இக்கட்டான சூழ்நிலை குறித்தும் மார்க் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு போட்டியாக சீனாவின் டிக்டாக் செயலி வளர்ச்சி அடைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்: மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியை ஃபேஸ்புக்கில் கதறல்

ABOUT THE AUTHOR

...view details