முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ தனது முதலீட்டாளர்கள் மூலம் ரூ.1,800 கோடி திரட்டியுள்ளது. கோரா, பிடிலிட்டி, டைகர் குளோபல், பவ் வேவ், ட்ராகனீர் ஆகிய ஐந்து நிறுவனங்கள் புதிய முதலீடுகளை சோமேட்டோவில் மேற்கொண்டுள்ளன.
இதன்மூலம், சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாயை சோமேட்டோ நிறுவனம் திரட்டியுள்ளது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதத்தில் சோமேட்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது ரூ.391 கோடியாக அதிகரித்துள்ளது.