நிதிச் சிக்கலிலிருந்து யெஸ் வங்கியை மீட்டெடுக்க அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளதால் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும். இதனால் இணைய வங்கி பணப்பரிமாற்றம் தடைசெய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் பணத் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிப்பதால், ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், 30 நாள்களில் இந்தப் பிரச்சனைக்கெல்லாம் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நிதி சேவை நிறுவனமான ஸிரோதா, யெஸ் வங்கியின் இணைய பணப்பரிமாற்றத்தை தற்காலிகமாக தடைசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யெஸ் வங்கி நிர்வாகத்தைக் கையிலெடுத்த ரிசர்வ் வங்கி