மும்பை:முதலீடுகளை ஈர்க்க யெஸ் வங்கி நிர்வாகம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளது.
யெஸ் வங்கி: முதலீடுகளை ஈர்க்க ஜனவரி 22-இல் உயர்மட்ட குழு ஆலோசனை! - யெஸ் வங்கி பங்கு விலை
பங்குகள் மூலமாகவும், வங்கி வைப்பு நிதி மூலமாகவும் முதலீடுகளை ஈர்க்க யெஸ் வங்கியின் உயர்மட்டக் குழு தலைவர் ஜனவரி 22ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளனர்.
![யெஸ் வங்கி: முதலீடுகளை ஈர்க்க ஜனவரி 22-இல் உயர்மட்ட குழு ஆலோசனை! Yes Bank board, Yes Bank, banking sector, Yes Bank on sensex, யெஸ் வங்கி முதலீடு, யெஸ் வங்கி செய்தி, யெஸ் பேங்க், business news in tamil, tamil business news, latest business news, bank news, வங்கி செய்திகள், yes bank share price, யெஸ் வங்கி பங்கு விலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10287695-thumbnail-3x2-yes-bank.jpg)
யெஸ் வங்கியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்களைக் கொண்டு ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. ஜனவரி 22ஆம் தேதி இது நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குகள் மூலமாகவும், வங்கி வைப்பு நிதி மூலமாகவும், பத்திரங்கள் மூலமாகவும் முதலீடுகளை திரட்ட இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
வங்கி மோசடியில் சிக்கி தற்போது உயிர் பெற்றிருக்கும் யெஸ் வங்கி, 2020ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி முதலீடுகளை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய வர்த்தக நாள் முடிவில் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியில் யெஸ் வங்கியின் பங்கு ஒன்றின் விலை 17.65 ஆக உயர்வுடன் இருந்தது.