தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பக்கத்து கடையிலிருந்து காசு எடுக்கலாம் - ஃபோன்பே ஏடிஎம் - டிஜிட்டல் இந்தியா

ஃபோன்பே செயலி மூலம் அருகிலுள்ள கடைகளிலிருந்து பணத்தை பெற உதவும் ஃபோன்பே ஏடிஎம் என்ற புதி வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

PhonePe ATM
PhonePe ATM

By

Published : Jan 23, 2020, 11:30 PM IST

இந்தியாவின் முன்னனி பண பரிமாற்ற செயலிகளில் ஒன்றான ஃபோன்பே, புதிதாக ஏடிஎம் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த ஃபோன்பே ஏடிஎம், சாதாரண ஏடிஎம்கள் போல இருக்காது. சொல்லப்போனால் இதில் இயந்திரங்களே இருக்காது.

மாறாக பயனாளர்கள், தங்கள் மொபைலிலுள்ள ஃபோன்பே செயலியிலுள்ள 'Stores'க்கு செல்லவேண்டும். அதிலுள்ள 'PhonePe ATM' என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், ஃபோன்பேவுடன் இச்சேவைக்காக இணைந்திருக்கும் கடைக்காரர்கள் பற்றி தெரிந்துகொள்ளாம்.

அந்தக் கடைகளில் சென்று ஃபோன்பே செயலியுள்ள QR codeஐ பயன்படுத்தி, நாளென்றுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் வரை தங்கள் சேமிப்பு கணக்கிலிருந்து எடுக்கலாம். இந்தச் சேவைக்காக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டது என்றும் ஃபோன்பே அறிவித்துள்ளது.

இச்சேவை தற்போது டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் இச்சேவை விரிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வெளியேறிய வோடஃபோன்... அதிர்ச்சியில் மற்ற நிறுவனங்கள்!

ABOUT THE AUTHOR

...view details