பழைய வரிசை ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறப் போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
பழைய ரூ.100, ரூ.10, ரூ.5 திரும்பப் பெறும் எண்ணம் இல்லை: ரிசர்வ் வங்கி - 100, 10 & 5 RS banknotes from circulation in near future RBI
15:56 January 25
முன்னதாக வரும் மார்ச் மாதம் முதல் பழைய 100 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி, திரும்பப் பெறுவதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அதுகுறித்த தகவல்களை, மத்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதன்முன்பு மத்திய ரிசர்வ் வங்கி 2019ஆம் ஆண்டு, புதிய 100 ரூபாய் நோட்டுக்கள், 5 ரூபாய் நோட்டுக்கள், 10 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தும் போதும், புழக்கத்தில் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்கள் வழக்கம்போல் செல்லும் என அறிவித்தது.
இதையும் படிங்க: ஸ்டாலின் நாளைக்கு முதலமைச்சரா வர போற ஆள் - அதிமுக எம்.எல்.ஏ பேச்சால் கலகலப்பு!