2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'உர்ஜா சங்கம்' என்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி நாட்டின் எண்ணெய் தேவையை பெருமளவில் குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். அவர் பதவியேற்ற 2014 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா, 77 சதவிகித கச்சா எண்ணெய் தேவைக்காக வெளிநாடுகளை சார்ந்திருந்தது. இதை 2022 ஆம் ஆண்டுக்குள் 67 சதவிகிதமாக குறைப்பதாக உறுதியளித்தார்.
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு... சமாளிக்குமா இந்தியா? - வெனிசுலா
டெல்லி: கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய இந்தியா அயல்நாடுகளை அதிகளவில் சார்ந்திருப்பதால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகலாம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தற்போது நிலைமையோ தலைகீழாக மாறியுள்ளது. கச்சா எண்ணெய் சார்ந்த புள்ளிவிவரங்களை அளிக்கு பி.பி.ஏ.சி(P.P.C.A) என்ற அமைப்பு தற்போது புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் 84 சதவிகித கச்சா எண்ணெய் தேவைக்காக இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு பிரதமர் உறுதியளித்தற்கு மாறாக இந்தியாவின் தேவை 7 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.
அத்துடன் இந்தியாவின் கச்சா எண்ணெய் நுகர்வும் 184.7 மில்லியன் டன்னிலிருந்து 194.6 மில்லியன் டன்னாக தற்போது உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளிடம் இருந்து மற்ற நாடுகள் எண்ணெய் இறக்குமதி மேற்கொள்ளக்கூடாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது இந்தியாவுக்கு மேலும் நெருக்கடியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்குப்பின் பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி உயர்வு இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.