தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

அப்பாடா பணவீக்கம் குறைஞ்சுடுச்சு!

ஹைதராபாத்: நடப்பு நிதியாண்டு பிப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் 2.26 சதவிகிதமாக குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Retail inflation
Retail inflation

By

Published : Mar 16, 2020, 7:43 PM IST

மொத்த விலை குறியீட்டெண்ணை (Wholesale inflation) அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம், நடப்பு நிதியாண்டு பிப்ரவரி மாதத்தில் 2.26 சதவிகிதமாக குறைந்துள்ளது. 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த பணவீக்கம் 3.10 சதவிகிதமாக அமைந்திருந்தது.

ஒரு நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது என்றால் அது அந்நாட்டின் அன்றாட பயன்படுத்தும் உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது என்பதை குறிக்கும். அதுவே பணவீக்கம் குறைந்துள்ளது என்றால் அதே சந்தையிலுள்ள பொதுவான பொருள்களின் விலை குறைந்துள்ளது என்பதை குறிக்கும்.

இந்த அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம் குறைந்துள்ளது. மேலும் கரோனா வைரஸ் எதிரொலியால் கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவைச் சந்தித்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. அதன் எதிரொலி, மார்ச் மாதத்திற்கான பணவீக்கம் மேலும் குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'கோழிக்கறியால் கரோனா?' - இழப்பை மீட்க இலவச கிரேவி

ABOUT THE AUTHOR

...view details