டெல்லி: இதன்மூலம் ஓலா, உபர் மூலம் ஆட்டோ புக்கிங் செய்யும்போது ஐந்து விழுக்காடு ஜிஎஸ்டி வரியை பயனாளிகள் செலுத்த வேண்டும். இந்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வருவாய்த் துறை நவம்பர் 18ஆம் தேதி ஜிஎஸ்டி விலக்கு குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், "ஆன்லைன் மூலம் வழங்கப்படும் ஆட்டோ சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கு சலுகை திரும்ப ரத்துசெய்யப்பட்டது. அதே வேளையில், நேரடியாக ஆட்டோ ஓட்டுநர்களால் வழங்கப்படும் பயணிகள் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஓலா, உபர் மூலம் ஆட்டோ புக்கிங் செய்யும்போது ஐந்து விழுக்காடு ஜிஎஸ்டி வரி பயனாளிகள் செலுத்த வேண்டும். இதன்மூலம் இனி ஆன்லைனில் புக் செய்யப்படும் ஆட்டோ கட்டணத்திற்கு ஐந்து விழுக்காடு ஜிஎஸ்டி வரியை ஜனவரி 1ஆம் தேதிமுதல் பயனாளிகள் கொடுக்க வேண்டிவரும்.