தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்திய அரசின் நிதி அமைச்சர்களில் அதிகமுறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தவர்கள் யார்? - நிதி நிலை அறிக்கை

இந்திய நிதி அமைச்சர்களில் மொரார்ஜி தேசாய் பத்து முறையும், ப. சிதம்பரம் ஒன்பது முறையும், எட்டு முறை பிரணாப் முகர்ஜியும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும், யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்து இருக்கின்றனர்.

budget
budget

By

Published : Jan 31, 2020, 4:59 PM IST

இந்திய அரசின் நிதி அமைச்சகம் என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் துறையாகும். விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதித்துறை அமைச்சராக ஆர். கே. சண்முகம் பணியாற்றினார். தமிழகத்தைச் சேர்ந்தவரான ஆர். கே. சண்முகம் பிறகு, மத்திய நிதி அமைச்சர்களாக டி. டி. கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்ரமணியம், ஆர். வெங்கட்ராமன், ப. சிதம்பரம் ஆகிய தமிழர்கள் அப்பதவியில் இருந்தனர். தற்போது நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனும் தமிழகத்தைச் சேர்ந்தவராவார்.

ஆண்டுதோறும் வரவு செலவு நிதிநிலை அறிக்கையை அரசின் நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். அதன்படி, 2020 - 2021 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்கிறார். இதனிடையே, நிதி அமைச்சர்களில் சிலர் அதிக முறை நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அவர்களில்,

மொரார்ஜி தேசாய் (1959-1964, 1967-1969)

மொரார்ஜி தேசாய் 10 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

ப. சிதம்பரம் (1997-1998, 2004-2008, 2012-2014)

ப. சிதம்பரம் 9 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி (1982-1984, 2009)

பிரணாப் முகர்ஜி 8 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

சிந்தமன் ராவ் தேஷ்முக் (1951-1957), யஷ்வந்த் சின்ஹா (1991-1992, 1998-2002)

சிந்தமன் ராவ் தேஷ்முக் மற்றும் யஷ்வந்த் சின்ஹா தலா 7 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

மன்மோகன் சிங் (1991-1996, 2008-2009)

மன்மோகன் சிங் 6 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிங்க: திருக்குறளைச் சுட்டிக்காட்டிய ராம்நாத் கோவிந்த்

ABOUT THE AUTHOR

...view details