தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'2 ஆண்டுகளில் அடைய வேண்டிய வளர்ச்சி வெறும் 2 மாதங்களில்' - சத்யா நாதெள்ளா

வாஷிங்டன்: பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் அடைய வேண்டிய வளர்ச்சி வெறும் இரண்டு மாதங்களில் அடைந்துள்ளதாக சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

Satya Nadella
Satya Nadella

By

Published : Apr 30, 2020, 3:39 PM IST

உலகில் 185-க்கும் மேற்பட்ட நாடுகள் கோவிட்-19 தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற பணிகளை மேற்கொள்பவர்கள் வீட்டிலிருந்தபடியே பணிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இணையப் பயன்பாடு 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. அதிக பேர் வீட்டிலிருந்து பணிபுரிவதால் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.

இது குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்யா நாதெள்ளா கூறுகையில், "டிஜிட்டல் தளத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மைக்ரோசாஃப்ட் அடைய வேண்டிய வளர்ச்சி வெறும் இரண்டு மாதங்களில் அடைந்துள்ளோம்.

தொலைதூர பணி, விற்பனை, வாடிக்கையாளர் சேவைகள், பள்ளி கல்லூரிகளில் கல்வி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வோருக்குத் தேவையான வசதிகளைத் தர வாடிக்கையாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.

மைக்ரோசாஃப்ட் 365-ஐ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல ஆபிஸ் 365-ஐ இப்போது 258 மில்லியன் மக்கள் கட்டணம் செலுத்திப் பயன்படுத்துகின்றனர்.

விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் தற்போது பயன்படுத்துகின்றனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 விழுக்காடு வளர்ச்சி. பல்வேறு தரப்பிலும் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் தேவை அதிகரித்துள்ளது" என்றார்.

இதுதவிர பொதுமக்கள் தங்கள் திறனுக்கு ஏற்ற வகையில் வேலைகளைக் கண்டறிய லிங்க்ட்இன்-இல் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கிளவுட் சேவைகள், எக்ஸ்பாக்ஸ் ஆகியவற்றின் தேவைகளும் பயன்பாடுகளும் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவு!

ABOUT THE AUTHOR

...view details